“நாடகமாடுவது யார் என்பது மக்களுக்கு தெரியும்” - பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்


“நாடகமாடுவது யார் என்பது மக்களுக்கு தெரியும்” - பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 28 April 2022 7:20 AM GMT (Updated: 28 April 2022 7:20 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாநில முதல்-அமைச்சர்களுடன் நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, வாட் வரியை குறைக்காத மாநிலங்கள் வாட் வரியை குறைக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இது பல்வேறு அரசியல் கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைலயில் இன்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வாட் வரி குறைப்பு தொடர்பான பிரதமரின் கருத்துக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

“பெட்ரோல் மீதான வாட் வரி குறித்த பிரதமரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போலானது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.  

8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாநில அரசுகளை குற்றம் சாட்டுவதா? மத்திய அரசுக்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை தமிழக அரச குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story