தமிழகத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 April 2022 7:45 PM IST (Updated: 28 April 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,   தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 73 ஆக குறைந்தது.  கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்தனர். சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 59ல் இருந்து 44 ஆக குறைந்தது.  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 447 லிருந்து 488 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 15,316 பேர் குணமடைந்துள்ளனர்.  இன்று மட்டும் 32 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story