அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி உருவாகும்


அடுத்த ஓரிரு ஆண்டுகளில்  சிறந்த மாநிலமாக புதுச்சேரி உருவாகும்
x
தினத்தந்தி 28 April 2022 10:03 PM IST (Updated: 28 April 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி உருவாகும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி உருவாகும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
பா.ஜ.க.வை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமித்ஷாவின் வருகை
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் கடந்த 24-ந் தேதி புதுச்சேரிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்தார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்டர்ஸ்டேட் பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கி திட்டத்தை தொடங்கிவைத்தார். தற்போதைய பஸ் நிலையத்தை ரூ.31 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவும், தாவரவியல் பூங்காவை நவீனப்படுத்தவும், பெரிய  வாய்க்காலை மேம் படுத்தவும் அடிக்கல் நாட்டினார்.
நம்பிக்கை
பிரதமர்   கூறிய  சிறந்த மாநிலமாக   புதுச்சேரியை உருவாக்கும் திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்த பிறகே தேர்தலுக்கு மக்களாகிய உங்களை வந்து சந்திப்போம் என்று உறுதியாக கூறியுள்ளார்.
எனவே  அடுத்த ஓரிரு ஆண்டுகளில்   புதுச்சேரி வர்த்தகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் உலகத் தரத்துக்கு வளர்ச்சிபெற்று சிறந்த புதுச்சேரியாக மாறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story