பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் - வைகோ வேண்டுகோள்


பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் - வைகோ வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 April 2022 2:42 AM IST (Updated: 29 April 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் - வைகோ வேண்டுகோள்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பியவர், பாவேந்தர் பாரதிதாசன். பெரியாரால், சிந்தை இனிக்கும் செந்தமிழ் கவிஞராகப் போற்றப்பட்டார். தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடினார். அவரது பிறந்தநாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று, அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், வீரமணி அருமையான கோரிக்கையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்பு வைத்தார்.

யாரும் கேட்காமலேயே பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் ஆகவும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழியர்களை உறுதிமொழி ஏற்கச்செய்து வரலாறு படைத்த முதல்-அமைச்சர், வீரமணியின் கோரிக்கையை ஏற்று, பாரதிதாசன் பிறந்தநாளை (ஏப்ரல் 29-ந் தேதி) கொண்டாடுவதும், அந்த எழுச்சியின் அடிப்படையில் எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்... இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story