தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் ஏன் குறைக்கவில்லை? அண்ணாமலை கேள்வி
தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் ஏன் குறைக்கவில்லை? அண்ணாமலை கேள்வி.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பிரதமரை வாக்கு தவறிய தமிழக முதல்-அமைச்சர் கண்ணியம் குறைவாக விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. தேர்தல் வாக்குறுதி தராத மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.10-ம், டீசலுக்கு ரூ.4-ம் வரி விலையை குறைத்துவிட்டது. தேர்தல் வாக்குறுதி தந்த தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் வரி மற்றும் விலையை ஏன் குறைக்கவில்லை? மத்திய அரசு வரிகளை குறைக்கிறதோ, இல்லையோ நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்து 355 நாட்கள் கடந்த பிறகும், தி.மு.க. தந்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமல் இருக்க காரணம் என்ன?
எந்த வாக்குறுதியும் தராமலேயே குறைத்த மத்திய அரசை குறை சொல்ல தங்களுக்கு தகுதி இல்லை. நேரடியாக பிரதமர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை நன்கு தெரிந்த நீங்கள் மழுப்பலாக தந்த பதிலை மக்கள் புரிந்துகொண்டார்கள்.
பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் குறைப்போம் என்ற உங்களுடைய தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story