சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கணக்கில் காட்டாத ரூ.53 லட்சம் பறிமுதல்


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கணக்கில் காட்டாத ரூ.53 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 April 2022 3:33 AM IST (Updated: 29 April 2022 3:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கணக்கில் காட்டாத ரூ.53 லட்சம் பறிமுதல் ஆந்திராவை சேர்ந்தவரிடம் விசாரணை.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது நேற்று விஜயவாடாவில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12711) நடைமேடை 4-ல் வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து சந்தேகப்படும் படியாக இறங்கி வந்த நபர் ஒருவரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கவனித்தனர்.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் குண்டூர், அலிநகரை சேர்ந்த யுகந்தர் (வயது 42) என்பதும், அவரிடம் இருந்த பையில் சோதனையிட்டபோது கணக்கில் காட்டாத ரூ.53 லட்சம் பணம் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதை வருமானவரி துறையிடம் ஒப்படைத்தனர்.

Next Story