கோயம்பேட்டில், ரூ.2.67 கோடியில் தினக்கூலி பணியாளர்கள் ஓய்வுக்கூடம் - சிற்றுண்டியகம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை கோயம்பேட்டில், ரூ.2.67 கோடியில் தினக்கூலி பணியாளர்கள் ஓய்வுக்கூடம்-சிற்றுண்டியகம் மற்றும் செங்கல்பட்டில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், ரூ.5 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டுக்காக, கோயம்பேட்டில் 5,419 சதுர அடி கட்டிட பரப்பளவில், ரூ.2 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புதிய தோட்டக்கலை கல்லூரி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நேற்று தொடங்கி வைத்தார்.
அதேபோல கரூர் மாவட்டம் கரூர், நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய 3 இடங்களில், புதிய வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இளம் அறிவியல் (மேதமை) வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் (மேதமை) தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகளில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் குமுளூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி வளாகத்தில், வேளாண்மை பொறியியல் பட்டய படிப்பு ஆகிய படிப்புகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். இக்கல்லூரிகளில், இக்கல்வியாண்டில் தலா 50 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சு.முத்துசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், வி.செந்தில் பாலாஜி, ஆர்.காந்தி, சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story