தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் அண்ணன்-தம்பி....!


தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் அண்ணன்-தம்பி....!
x
தினத்தந்தி 29 April 2022 9:15 AM IST (Updated: 29 April 2022 9:17 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே உயிரிழந்த தாய்க்கு கோவில் கட்டி அண்ணன்-தம்பி வழிபாடு செய்து வருகின்றனர்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நாமகிரிப்பேட்டை அருகே  உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் முருகேசன். இவரது தம்பி பச்சமுத்து. இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர்களது தாயார் அலமேலு (72) இறந்துவிட்டார். தாயின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த முருகேசன் மற்றும் இவரது தம்பி பச்சமுத்து தாய் இறந்த சோகத்தில் மனம் நொடிந்து போயினர். மன அமைதிக்காக கோவில் கோவிலாக சென்று வந்தனர். 

இந்த நிலையில்தான் அண்ணன் தம்பி இருவருக்கும் தங்களது தாயிற்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். இதையொட்டி அவர்களது தோட்டத்தின் ஒரு பகுதியில் கருங்கற்களால் கோவில் கட்டினர். கருவறையில் 2 3/4 அடி உயரத்தில் அவரது தாயாரின் முக வடிவில் கருங்கல் சிலை அமைத்தனர். 

தினந்தோறும் தாயின் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இறந்துபோன பாசமிகு தங்களது தாய்க்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபடும் மகன்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story