சென்னை: மளிகை கடையில் போலி கொசு மருந்து பாட்டில்கள் விற்பனை - 2 பேர் கைது...!


சென்னை: மளிகை கடையில் போலி கொசு மருந்து பாட்டில்கள் விற்பனை - 2 பேர் கைது...!
x
தினத்தந்தி 29 April 2022 11:00 AM IST (Updated: 29 April 2022 11:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் போலி கொசு மருந்து பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்,

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் உள்ள மளிகை மொத்த விற்பனை கடைகளில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி கொசு மருந்து பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் மேலாளர் சதிஷ்குமார் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார்.  

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் இன்று மளிகை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது 2 கடைகளில் போலி கொசு மருந்துகள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து வியாபாரிகள் சூரஜ்சிங்(35) மற்றும் இம்தியாஸ்(34) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 88 போலி கொசு மருந்து பாட்டில்கள் மற்றும் 26 மெஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story