குன்னூர் கொடூரம்...! ஒரு தலைக்காதல் மாணவியை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர்


குன்னூர் கொடூரம்...! ஒரு தலைக்காதல் மாணவியை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர்
x
தினத்தந்தி 29 April 2022 12:01 PM IST (Updated: 29 April 2022 2:03 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு இன்று வழக்கம் போல 12- ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சென்றுள்ளார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு இன்று வழக்கம் போல 12- ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது, அந்த மாணயை தொடர்ந்து வந்துள்ளார்  ஆசிக் என்ற இளைஞர். இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தனர். 

அப்போது ஆசிக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த மாணவியின் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். இதனால் மாணவி அலறி உள்ளார்.  மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு திரண்ட பொதுமக்கள், அந்த இளைஞரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story