சென்னை ஐகோர்ட்டுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு ஏப்ரல் 30ந்தேதி முதல் ஜூன் 5ந்தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்துக்கு 4 நீதிபதிகள் வீதம் 20 பேர் விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வாரத்துக்கு 3 நீதிபதிகள் வீதம் 15 நீதிபதிகள், விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மே மாதத்தில் வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், அதன் மீதான விசாரணை, புதன் மற்றும் வியாழ கிழமைகளில் நடைபெறும் எனவும் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
எனினும், மே முதல் வாரம் மட்டும் திங்கள் மற்றும் புதன் கிழமையில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், அதன் மீது வியாழன், வெள்ளி கிழமைகளில் விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story