குரூப் 4 தேர்வு; மொத்தம் 21 லட்சம் பேர் விண்ணப்பம் - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்களுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 301 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவுடன் விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்தது.
இதன்படி காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பணிடங்களுக்கு மொத்தம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 225 பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 6 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஒரு பணியிடத்திற்கு 300 பேர் போட்டியிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story