சென்னையில் மீண்டும் உயர்ந்த தக்காளி விலை !


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2022 2:34 PM IST (Updated: 29 April 2022 2:34 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னை, 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியில் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து குறைவாக இருப்பதாலும், கோடை வெயிலின் தாக்கத்தால் தக்காளியை இருப்பு வைத்து விற்க முடியாத காரணத்தினாலும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

கோயம்பேடு சந்தையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ஒரு கிலோ தக்காளியின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் 10 ரூபாய் உயர்ந்து கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு மாதத்தில் மட்டும் தக்காளியின் விலை கிலோவிற்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும், வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story