ஆட்டோ ஓட்டனுமா மாதம் ரூ.10 ஆயிரம் மாமூல் கேட்ட கும்பல் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்கள்


ஆட்டோ ஓட்டனுமா மாதம்  ரூ.10 ஆயிரம் மாமூல் கேட்ட கும்பல் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 29 April 2022 3:46 PM IST (Updated: 29 April 2022 4:06 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவுக்கு 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டுவதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர்.

சேலம்:

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் இன்று மதியம் திடீரென வந்து தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் புதிய பஸ் நிலையம் ஏ.டி.சி. டெப்போ பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் அசோக், பிரபு, நாராயணன், மணி, இளங்கோ உள்பட 6 பேர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணையில் அவர்கள் கூறியதாவது:-

அந்த பகுதியை சேர்ந்த பெட்டிசன் சுந்தரம் உள்பட 3 பேர் ஆட்டோவுக்கு 10 ஆயிரம் கொடுத்தால் தான் இங்கு ஆட்டோ ஓட்ட முடியும், இல்லாவிட்டால் ஆட்டோ ஓட்ட முடியாது என்று கூறி எங்களை துரத்துகிறார்கள். மேலும் நீங்கள் பணம் கொடுக்காவிட்டாலும், நாங்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது.

எனவே பணம் தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டுகிறார்கள். இதனால் நாங்கள் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்

இதையடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story