“அம்மா என்ற பெயரை மாற்ற வேண்டாம்” - முன்னாள் அமைச்சர் விடுத்த கோரிக்கை


“அம்மா என்ற பெயரை மாற்ற வேண்டாம்” - முன்னாள் அமைச்சர் விடுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 29 April 2022 7:43 PM IST (Updated: 29 April 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே செயல்பட்டு வரும் திட்டங்களில் உள்ள, ‘அம்மா’ என்ற பெயரை மாற்ற வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் திட்டங்களில் உள்ள, ‘அம்மா’ என்ற பெயரை மாற்ற வேண்டாம் என தமிழக அரசிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். பெயரை மாற்றுவதை விட, நல்ல பெயரை ஈட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்தை விட மராட்டிய மாநிலம் முன்னிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும் அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானத்தை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 

Next Story