பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய இளைஞர்கள் - மாணவர்கள் சாலை மறியல்...!


பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய இளைஞர்கள் - மாணவர்கள் சாலை மறியல்...!
x
தினத்தந்தி 30 April 2022 1:47 PM IST (Updated: 30 April 2022 1:47 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் சாலை மறியில் செய்தனர்.

கடலூர்,

கடலூர் அடுத்த வெள்ளக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளக்கரை, மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கிக் கொண்டனர். அவர்களில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரும் பள்ளிக்குள் புகுந்து வேறொரு தரப்பை சேர்ந்த மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் காயமடைந்த 4 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே பள்ளி வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளிக்கூடம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 


இதுகுறித்து அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story