நாளை டாஸ்மாக் விடுமுறை: இன்றே கடையில் குவிந்த மதுபிரியர்கள்


மயிலாப்பூர்
x
மயிலாப்பூர்
தினத்தந்தி 30 April 2022 8:38 PM IST (Updated: 30 April 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

நாளை மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடை விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் இன்று மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

சென்னை:

நாளை மே தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

இதையொட்டி இன்று பகல் முதலே மதுபானம் வாங்க மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் நாளை ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மேலும் கூட்டம் அலைமோதியது. 

Next Story