முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் தலைமை செயலாளர் சந்திப்பு
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் தலைமை செயலாளர் சந்தித்தாா்.
புதுவை தலைமை செயலாளராக இருந்த அஸ்வனிகுமார் மாற்றப்பட்டு புதிய தலைமை செயலாளராக ராஜீவ்வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை புதுச்சேரி வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய தலைமை செயலாளரான ராஜீவ்வர்மா நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் தேனீ.ஜெயக் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story