கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!
x
தினத்தந்தி 1 May 2022 10:46 AM IST (Updated: 1 May 2022 10:46 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குளுமையை அனுபவிக்க மலை வாசஸ்தலங்களைத் தேடி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வார விடுமுறை மற்றும் மே தின விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து உள்ளனர். 

இவர்கள் மோயர் சதுக்கம், பைன்மரச் சோலை, தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு,பிரையண்ட் பூங்கா, படகுக் குழாம் போன்ற இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். மேலும் கொடைக்கானலில் நிலவும் பகல் நேர இதமான வெப்பம், மதிய வேளைக்கு பின் நிலவும் ரம்மியமான குளிர் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்கின்றனர்.



Next Story