பள்ளிவாசலில் மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி...!
வேதாரண்யம் அருகே பள்ளிவாசலில் மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம்,
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்காடு ஊராட்சியில் அமைந்துள்ளது முகைதீன் பள்ளிவாசலில். இந்த பள்ளிவாசலில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்வாக கடந்த 40 ஆண்டுகளாக 29-வது நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது இந்து மதத்தை சேர்ந்த வேதாரண்யம் ருத்திராபதி குடும்பத்தினர் உணவு சமைத்து வழங்குவது வழக்கும்.
அதன்படி இன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது உணவு நோன்புகஞ்சிகள் தங்கள் வீட்டில் தயார் செய்து பள்ளிவாசலுக்கு எடுத்து வந்து பரிமாறி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story