சிவகாசி அருகே காணாமல் போன வாலிபர் உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்பு..!
சிவகாசி அருகே நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போன வாலிபர் உடல் கருகி நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கிராம சேவை மைய கட்டிடத்தின் உச்சியில் துர்நாற்றம் அடிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீசார் கிராம சேவை மைய கட்டிடத்தின் மீது ஏறி சோதனையிட்டபோது கருகிய நிலையில் வாலிபர் இறந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.
அப்போது உடல் கருகிய நிலையில் இருந்த வாலிபர் கையில் அணிந்திருந்த மோதிரத்தின் அடையாளத்தை வைத்து இறந்த வாலிபர் கோட்டையூர் முனியசாமி என்பவரது மகன் பாலமுருகன் (வயது 28) கட்டிட தொழிலாளி என்பது அடையாளம் தெரிந்தது.
மேலும் பாலமுருகனை காணாமல் கடந்த நான்கு தினங்களாக உறவினர்கள் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இங்கு இறந்தது அதிர்ச்சியைத் தந்தது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பாலமுருகன் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்லாமல் கிராம சேவை கட்டடத்தின் உச்சியில் தூங்குவதற்காக ஏறியுள்ளார். அப்போது இருளில் உயர் மின்னழுத்த கம்பி சென்றதை கவனிக்கவில்லை. எதிர்பாராத விதமாக உடல் பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இறந்து மூன்று தினங்களாக இருக்கலாம் என தெரிவித்தனர். பாலமுருகன் உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகாசி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து பாலமுருகன் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர். இறந்த பாலமுருகனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Related Tags :
Next Story