விருதுநகரில் சுற்றுலாத்துறையின் தமிழ்நாடு ஓட்டல் சீல் வைப்பு..!


விருதுநகரில் சுற்றுலாத்துறையின் தமிழ்நாடு ஓட்டல் சீல் வைப்பு..!
x
தினத்தந்தி 1 May 2022 8:50 PM IST (Updated: 1 May 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் உள்ள சுற்றுலாத்துறையின் தமிழ்நாடு ஓட்டலை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் சாத்தூர் ரோட்டில் சுற்றுலாத்துறையின் தங்கும் விடுதியான தமிழ்நாடு ஓட்டல் உள்ளது. இந்த தங்கும் விடுதி தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

கோவில்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி என்பவர் இந்த தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தியுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக குத்தகை தொகை ரூ.44 லட்சம் கட்டாததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மதுரை மண்டல சுற்றுலாதுறை அதிகாரிகள், விருதுநகர் தாசில்தார் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலையில் தங்கும் விடுதியை ஜப்தி செய்து அங்குள்ள பொருட்களை ஒருஅறையில் போட்டு சீல் வைத்தனர்

Next Story