கோபி சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை - 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்...!


கோபி  சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி  காற்றுடன் கனமழை - 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்...!
x
தினத்தந்தி 2 May 2022 10:51 AM IST (Updated: 2 May 2022 10:51 AM IST)
t-max-icont-min-icon

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்து உள்ளது.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையால் கடுக்காம்பாளையம், நாதிபாளையம், பொலவக்காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை, நேந்திரன், கதழி உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.

ஒரு வாழை நடவு செய்ய சுமார் 10 முதல் 150 ரூபாய் வரை செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்..

மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு காப்பீடு செய்யாத பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story