மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்
மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தகவல் தொழில் நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இதில் முதற்கட்டமாக விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை டைடல் பார்க் நிறுவனம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் கருப்பூர், வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் மற்றும் மேல்மொணவூர், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதல் கட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக திட்ட மேலாண்மை, பொறியியல் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான முன்மொழிவுகளை டைடல் பார்க் நிறுவனம் கோரியுள்ளது. 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story