வேடசந்தூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து - 2 பேர் படுகாயம்


வேடசந்தூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 May 2022 3:16 PM IST (Updated: 2 May 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே சாலையோர புளியமரதில் கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(33) என்பவரும் அதே ஊரைச் சேர்ந்த சண்முகம்(42) என்பவரும் மாருதி காரில் திண்டுக்கல் செல்வதற்காக இன்று காலை புறப்பட்டனர். காரை மாரிமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.

ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் சாலையில் இருந்து சாலையூர் நால்ரோட்டில் தாடிக்கொம்பு சாலையில் கார் திரும்பும்போது எதிர்பாரதவிதமாக டிரைவரின் கட்டுப்பட்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதி நொறுங்கியது.

இதில் காரில் வந்த மாரிமுத்து, சண்முகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த வேடசந்தூர் போலீஸ் ஏட்டு பார்த்தசாரதி மற்றும் பொதுமக்கள் துணையோடு காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தான கார் மரத்தில் மோதாமல் சென்று இருந்தால் மரத்தின் அருகே இருந்த ஓட்டலுக்குள் புகுந்து பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கார் மரத்தில் மோதியதால் அதிஷ்டவசமாக பெரும் விபத்தது தவிர்க்கப்பட்டது.

இது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story