தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை - மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 2 May 2022 3:22 PM IST (Updated: 2 May 2022 3:22 PM IST)
t-max-icont-min-icon

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வருக்கு குருபூஜை தினத்தன்று பட்டினப்பிரவேச விழா நடத்தப்படும். அந்த விழாவின் போது ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிச் சென்று வீதி உலா வருவது வழக்கம். 

இவ்வாறு ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்க்கிறது.

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

Next Story