காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய வாலிபர்...!


காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய வாலிபர்...!
x
தினத்தந்தி 2 May 2022 4:30 PM IST (Updated: 2 May 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வாலிபர் காப்பாற்றி உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராதா (வயது37) ராதா இன்று காலை 10 மணி அளவில் பள்ளிபாளையம் புதிய பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்று உள்ளார்.

அப்போது ஆற்று தண்ணீரில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செந்தில் மற்றும் ரோந்து சென்ற 2 போலீசார் ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவரிடம் அவரை காப்பாற்றும்படி தெரிவித்தனர்.

பின்னர் அந்த பெண்ணை நோக்கி பரிசலை விரைந்து செலுத்திய அந்த மீனவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பெண்ணின் தலை முடியை பிடித்து தூக்கினார்.

அப்போது, அவர் தனியா இருந்தால் பெண்ணை தண்ணீரில் இருந்து அவரால் தூக்கமுடிவில்லை. இதனால் ஒரு கையால் பெண்ணின் கையை பிடித்து தூக்கி நீரில் முழுகாதவாறு பார்த்துக் கொண்டார். 

இதனை பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர் பரிசல் ஓட்டி தடுமாறுவதை பார்த்து நடு ஆற்றில் குதித்து நீந்திச் சென்று படகில் ஏறி அந்தப் பெண்ணை ஆளுக்கொரு ஒரு கையில் பிடித்து தூக்கி பரிசலில் சேர்த்தனர். 

பின்னர், கரைக்கு கொண்டு வந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story