நாமக்கல் சிறுமி கடத்தல் விவகாரம்: உறவினர்கள் இருவர் கைது..!


நாமக்கல் சிறுமி கடத்தல் விவகாரம்: உறவினர்கள் இருவர் கைது..!
x
தினத்தந்தி 2 May 2022 6:27 PM IST (Updated: 2 May 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே 11 வயது சிறுமியை கடத்திய வழக்கில் உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள காளிசெட்டி பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். (வயது 39). இவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள் மகன் ஆகியோருடன் முருகேசன் என்பவரின் வீட்டில் மாடியில் குடியிருந்து வருகின்றனர். லாரி டிரைவரான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லாரிக்கு சென்றுவிட்டார். 

இந்த நிலையில் கடந்த 30ம் தேதி இரவு மொட்டை மாடியில் சரவணனின் மனைவி மற்றும் மகன் மகள் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு சுமார் ஒன்றரை மணி அளவில் இரண்டு நபர்கள் முகமூடி அணிந்த நிலையில் வந்து கத்தியால் மிரட்டி மனைவி மற்றும் மகனின் வாயை டேப் கொண்டு ஒட்டி கைகளை பின்னால் கட்டி விட்டு மகளை கடத்தி சென்றனர். அப்பொழுது அவர்கள் வைத்திருந்த செல்போனில் இருந்து சிம் கார்டையும் எடுத்து சென்றனர். 

பின்னர் 1ம் தேதி மதியம் அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து 50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் 1ம் தேதி இரவு 12 மணி அளவில் அலங்காநத்தம் பிரிவு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழந்தையை விட்டுவிட்டு சென்று விட்டனர். பின்பு போன் மூலம் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து எருமப்பட்டி போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டனர். பின்னர் குழந்தையை பொலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இது தொடர்பான விசாரணையில் குழந்தையை சரவணனின் உறவினர்களான புதுக்கோட்டை தெற்கு வீதியை சேர்ந்த மணிகண்டன் (35), அவரது மனைவி பொன்னுமணி (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பணத்துக்காக கடத்தினார்கள் அல்லது வேறு ஏதும் காரணமா, மேலும் இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story