கொளுத்தும் வெயிலில் இருந்து மலைப்பாம்பு ஆமைகளை பாதுகாக்க தண்ணீர் தொட்டிகள் வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு
புதுவையில் கொளுத்தும் வெயிலில் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி
புதுவையில் கொளுத்தும் வெயிலில் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெயில் கொளுத்துகிறது
கோடைக்காலம் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் வேளையில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் கொடுமை உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பகலில் தெருக்கள், வணிக நிறுவனங்களிலும் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
மலைப்பாம்புகள்
இந்தநிலையில் புதுவை வனத்துறையில் பாதுகாக்கப்படும் வன விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெயில் கொளுத்தி வரும் நிலையில் மலைப்பாம்புகள், உடலை குளுமையாக வைத்துக்கொள்ள தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த தொட்டிகளில் நிரம்பியுள்ள தண்ணீரில் பாம்புகள் ஊர்ந்து சென்று தங்கள் உடலை குளிர்வித்துக்கொள்கின்றன. மேலும் தரைப்பகுதியிலும் ஊழியர்கள் அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துள்ளனர். இதனால் ஓரளவுக்கு வெப்பதாக்குதல் குறைந்துள்ளது.
நட்சத்திர ஆமை
அதுமட்டுமின்றி வனத்துறையில் பாதுகாக்கப்படும் நட்சத்திர ஆமை குஞ்சுளும் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் தொட்டி வசதி செய்யப்பட்டுள்ளது. அதனை சுற்றி கூழாங்கற்களை அடுக்கி இயற்கையான சூழலை அமைத்துக்கொடுத்துள்ளனர்.
அந்த ஆமை குஞ்சுகள் ஓய்வெடுக்க வசதியாக மண்பானை கூடுவசதியும் செய்யப்பட்டுள்ளது. க்ஷ மதிய வேளையில் இந்த ஆமை குஞ்சுகள் பெரும்பாலும் தண்ணீர் தொட்டிக்குள்ளேயே நீந்தி விளையாடுகின்றன.
லட்சுமி யானை
இதேபோல் புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி ஓய்வெடுக்கும் ஈஸ்வரன்கோவில் வளாக பகுதியிலும் தண்ணீர் தொட்டியில் எந்நேரமும் தண்ணீர் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதில் யானை லட்சுமி தண்ணீரை தனது துதிக்கையால் வாரியிறைத்து ஆனந்த குளியல் போட்டு வருகிறது.
Related Tags :
Next Story