வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது


வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2022 9:24 PM IST (Updated: 2 May 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

புதுவை மறைமலை அடிகள் சாலையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை மறைமலை அடிகள் சாலையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
புதுச்சேரி சின்னசுப்புராயபிள்ளை வீதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 19). இவர் அதே வீதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவரை பஸ் ஏற்றி விடுவதற்காக கடந்த 30-ந் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் புதிய பஸ்நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு மறைமலை அடிகள் சாலையில் வந்தபோது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அர்ச்சுனன், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அர்ச்சுனன் வைத்திருந்த விலை உயர்த்த செல்போனை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
2 பேர் கைது
இது குறித்து அர்ச்சுனன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தபோது, செல்போனை பறித்தது அரியாங்குப்பம் மார்க்கெட் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (30), வீராம்பட்டினத்தை சேர்ந்த அரவிந்த்குமார் (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story