தரமற்ற தின்பண்டங்கள் விற்பதாக பேக்கரி சூறை


தரமற்ற தின்பண்டங்கள் விற்பதாக பேக்கரி சூறை
x
தினத்தந்தி 2 May 2022 10:05 PM IST (Updated: 2 May 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

தரமற்ற தின்பண்டங்கள் விற்பதாக பேக்கரியை சூறையாடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ராஜீவன் (வயது 58). இவர் கொம்பாக்கம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் செட்டிக்குளத்தை சேர்ந்த சக்திவேல், பிரகாஷ் ஆகியோர் தின்பண்டங்கள் வாங்கினர். இதன்பின் தரமற்ற பொருட்களை விற்பதாக கூறி ராஜீவனுடன் தகராறு செய்து தாக்கியதுடன் பேக்கரியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிகிறது.
இதை தட்டிக்கேட்ட போது ராஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சக்திவேல், பிரகாஷ் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜீவன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 
இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், பிரகாஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story