இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு..!
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
யாழ்ப்பாணம்,
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மே தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை சந்தித்தார்.
இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
Related Tags :
Next Story