8 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை
புதுவையில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா இல்லாத நிலையில் 8 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 14 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. நேற்று ஒருவர் குணமடைந்தார்.
தற்போது 8 பேர் மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 5 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 83 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 17 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 75 ஆயிரத்து 70 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story