கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ரம்ஜான் வாழ்த்து
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புனித ரமலான் மாதத்தில் பிறை கண்டு ஈகைப்பெருநாள் கொண்டாடும் புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், ஈகை குணம், அருட்கொடை, அன்பு, அமைதி எல்லாம் செழிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story