ஆம்பூர்: கோயில் மரத்தில் கார் மோதி பெண் பலி - 2 பேர் காயம்


ஆம்பூர்: கோயில் மரத்தில் கார் மோதி பெண் பலி - 2 பேர் காயம்
x
தினத்தந்தி 3 May 2022 1:40 PM IST (Updated: 3 May 2022 1:40 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே கோயில் மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளரின் மனைவி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

ஆம்பூர்:

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் வயது (வயது 63). இவர் சென்னை எக்மோர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் இன்று அதிகாலை சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்றார். 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காரில் பயணம் செய்தனர்.

அப்போது சீனிவாசன் மகன் அமிதாபட்டு (31) என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கார் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே வந்த போது ரோட்டை கடக்க முயன்ற நபர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பி உள்ளார். 

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள வீரவர் கோயில் மரத்தின் அடியில் உள்ள சாமி சிலைகளின் மீது மோதியது. இந்த விபத்தில் சீனிவாசன் மனைவி மாலதி (53) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த சீனிவாசன், அமிதாபட்டு மகன் துருவா (5) ஆகிய 2 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக  வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலிசார் சம்பவ இடத்திற்க்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த மாலதியின் உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 

Next Story