பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 3 May 2022 3:14 PM IST (Updated: 3 May 2022 3:14 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் (பிளஸ்-1) வருகிற 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும், 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வுகள் வருகிற 6-ந் தேதி தொடங்கி30-ந்தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Next Story