புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு


புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 May 2022 10:07 PM IST (Updated: 3 May 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் புதிதாக 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 338 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்தனர். தற்போது 9 பேர் மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 
நேற்று  முதல் தவணை தடுப்பூசியை 103 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,145 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 262 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 89 ஆயிரத்து 82 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Next Story