பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்


பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 3 May 2022 10:13 PM IST (Updated: 3 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர்யில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

வில்லியனூர் அடுத்த அரும்பார்த்தபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது தங்கை மோகனபிரியாவுக்கும், பாகூர் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த முத்துக்குமரனுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, மோகனபிரியாவுக்கு வரதட்சணையாக 40 பவுன் நகைகள், வீட்டு உபயோக பொருட்கள், கார் ஆகியவற்றை அவரது குடும்பத்தினர் வழங்கினர்.
திருமணத்துக்கு பின் மோகனபிரியா, முத்துக்குமரன் ஆகியோர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை  கேட்டு  முத்துக் குமரன் மற்றும் அவரது குடும்பத்தினர்  மோகன பிரியாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முத்துக்குமரன், அவரது உறவினர்கள் வேல்விழி, மோகனா, சரஸ்வதி ஆகியோர் சம்பவத்தன்று மோகன பிரியா    வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கூடுதல் வரதட்சணை கேட்டு, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசில்     சம்பத் அளித்த புகாரின் பேரில் முத்துக்குமரன் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Next Story