வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி
வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள சின்னகுச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் அபர்ணா (வயது 23). இவருடைய செல்போன் எண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தான் டேட்டா சர்வீஸ் தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியதோடு அதற்கு பதிவு கட்டணம் ரூ.400, ஜி.எஸ்.டி. ரூ.3,400 மற்றும் கம்பெனி பிட்டிங் ரூ.60,590 ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அபர்ணா, அந்த நபர் கூறியபடி ரூ.64,390-ஐ கூகுள்பே மூலம் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித்தராமலும் அந்த நபர் ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுகுறித்து அபர்ணா, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story