டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவருக்கு சிறையில் முதல் வகுப்பு


டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவருக்கு சிறையில் முதல் வகுப்பு
x
தினத்தந்தி 3 May 2022 9:26 PM GMT (Updated: 3 May 2022 9:26 PM GMT)

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி, வக்கீல் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அனைவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தூக்கு தண்டனை பெற்ற டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், சிறையில் தனக்கு முதல் வகுப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவருக்கு முதல் வகுப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு சிறை விதிகளின்படி தடை இருப்பதாக கூறி, முதல் வகுப்பு வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதிகள், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால், ஜேம்ஸ் சதீஷ்குமாருக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story