திருமருகல்: பிடாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்


திருமருகல்: பிடாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
x
தினத்தந்தி 4 May 2022 12:03 PM IST (Updated: 4 May 2022 12:03 PM IST)
t-max-icont-min-icon

நாகை திருமருகல் அருகே பிடாரியம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையக நடைபெற்றது.

நாகை:

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். 

அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி காப்பு கட்டி துவங்கப்பட்டது. திருவிழாவில் முதல்நாள் காவடி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் மூன்று தேர்கள் வீதி உலா, எல்லை சுற்றுதல், தேர் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

அதைத்தொடர்ந்து இரவு பூத சிலைகள் வீதிஉலா, வேண்டுதல் சிலைகள் வீதிஉலா மற்றும் மூன்று தேர்கள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திருவிழா வரும் மே 6-ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அகரக்கொந்தகை கிராமவாசிகள் செய்திருந்தனர்.


Next Story