நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 60 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், 4 அலகுகளை தவிர்த்து முதலாவது அலகில் மட்டும் 210 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story