சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு..!
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் சுந்தரக்குடும்பன்பட்டியை சேர்ந்த சோலை விக்னேஷ் (26) என்ற தொழிலாளி உயிரிழந்தார். இந்த நிலையில் வெடிவிபத்தில் உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக சிவகாசி வட்டம், கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருபத்தைந்தே வயதான சோலை விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 3 லட்சம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story