உறுதிமொழி ஏற்பு விவகாரம்: மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக ரத்தினவேல் நீடிப்பார்
மதுரை மருத்துவ கல்லூரிக்கு ரத்தினவேல் முதல்வராக நீடிப்பார் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் ஜி.கே.மணி (பா.ம.க.), மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர், மதுரை மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது:-
மருத்துவக்கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் உலகம் முழுவதிலும் பல ஆண்டுகளாக, தொடர்ந்து பெரும்பாலான நாடுகளிலும் ‘ஹிப்போகிரெடிக் உறுதிமொழிதான் எடுத்து வருகிறார்கள். ‘ஹிப்போகிரெடிக் என்பவர் ஆங்கில மருத்துவத்தின் தந்தை என்று உலகளவில் போற்றப்படுபவர். அவருடைய பெயராலேதான், மனிதநேயத்தின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துகளைத்தான் உறுதிமொழியாக தொடர்ந்து ஏற்று வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிப்ரவரி 7-ந்தேதி, தேசிய மருத்துவ ஆணையம் ‘ஹிப்போகிரெடிக்’ உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சபத் என்கின்ற ஒரு புதிய உறுதிமொழியை ஏற்கவேண்டும் என்று வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்த செய்தி பரவிய உடனேயே, இத்துறையின் செயலாளர், ஜெ.ராதாகிருஷ்ணன் உடனடியாக தமிழகத்தில் இருக்கிற அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கும் ஒரு தாக்கீது அனுப்புகிறார்.
சிக்கிக்கொள்ள வேண்டாம்
அதில் கல்லூரி முதல்வர்கள் தேவையில்லாமல் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். நீங்கள் புதியதாக எந்தவொரு உறுதிமொழியையும் ஏற்றுக்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கக்கூடாது. ‘ஹிப்போகிரெடிக்’ உறுதிமொழி மனிதநேயத்தின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.
மகரிஷி சரக் சபத் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது என்று சொன்னாலும், எதிர்காலத்தில், அதாவது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த உறுதிமொழியை எடுக்கப்பட்டபிறகு, இந்த உறுதிமொழியை சமஸ்கிருதத்தில்தான் எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படும்.
மொழி திணிப்பு
அந்த மாதிரியான நிலைகள் வருகிறபோது, தமிழகத்தில் பெரிய அளவில் ஒரு மொழித்திணிப்பாக அமைந்துவிடும். பொதுவாகவே, இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் மொத்தம் 24 ஆயிரம் பேர்தான் என்று அவர்களே அவர்களுடைய பதிவேட்டில் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த மொழித்திணிப்பு தமிழகத்தில் கூடாது என்பது முதல்-அமைச்சருடைய விருப்பம்.
அந்த வகையில் செயலாளர் இந்த அறிக்கையை அனுப்பினார்கள். அனுப்பியதற்கு பிறகு 11-ந்தேதியன்று டி.எம்.இ. அவருமே, மருத்துவக்கல்லூரிகளுக்கு இந்த ஆணையை அனுப்பினார்.
அதற்கு பிறகு மார்ச் 29-ந்தேதியன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடும்ப நலத்துறையின் இணை மந்திரி பாரதி பிரவீன்பவார் மகரிஷி சரக்சபத் ஏற்றுக்கொள்ள வலியுறுத்தவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை கல்லூரியின் முதல்வர், தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக மருத்துவர்கள் சங்கம் ஒன்று அவருக்கு தெரியாமல் இது நடந்துவிட்டது, எப்படியோ சமூகவலைதளங்களில் பரவிய இந்த செய்தியைக் கொண்டு மாணவர்கள் அதைப்படித்தார்கள் என்றார்கள்.
மருத்துவக்கல்லூரி முதல்வராக...
மகரிஷி சரக்சபத் என்கிற ஒரு புதிய உறுதிமொழியை இந்தியா முழுவதும் திணிப்பதற்கு ஏதோ ஓர் கூட்டம் முனைந்திருக்கிறது என்றாலும் கூட, அந்த கல்லூரியின் முதல்வர் என்னை வீட்டில் சந்தித்து, தெரியாமல் நடந்துவிட்டது, இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை என்கிறார்.
மருத்துவ கல்லூரி முதல்வர்களுடன் ஒரு கூட்டம் நடத்தி, எதிர்காலத்தில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் மிகுந்த கருணை உள்ளத்தோடு சொன்னார்கள், இந்த மாதிரி கல்லூரி முதல்வர் ஏற்கனவே பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்கின்ற தகவல் எனக்கு வந்திருக்கிறது.
அவர் வருத்தமும் தெரிவித்திருப்பதால், அவரை மீண்டும் அப்பணியில் நீடிப்பதற்கு உத்தரவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே அப்பணியில் ரத்தினவேல் நீடிக்க இருக்கிறார் என்கிற செய்தியை சொல்லிக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற புதிய உறுதிமொழிகள் யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story