வணிகர் தினம் - சென்னையில் காலை ஓட்டல்கள் விடுமுறை...!


வணிகர் தினம் - சென்னையில் காலை ஓட்டல்கள் விடுமுறை...!
x
தினத்தந்தி 5 May 2022 8:57 AM IST (Updated: 5 May 2022 8:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

சென்னை,

சென்னையில் இயங்கும் அனைத்து ஓட்டல்களுக்கும் இன்று காலை ஒருவேளை மட்டும் விடுமுறை விடப்படுகிறது என்று சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து  சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த மாதம் 2022-ம் ஆண்டுக்கான முதல் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஓட்டல்களின் மூலப்பொருட்களான எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றத்தால், உணவுப் பொருட்கள்  தயாரிக்க பயன்படும் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

இதனால் ஓட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலையையும் ஏற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஓட்டல்கள் உள்ளன. 

இந்நிலையில், இன்று மே 5-ம் தேதி வியாழக்கிழமை வணிகர் தினம் கொண்டாடப்படுவதால், வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும், வணிக சகோதரத்தை நிலைநாட்டவும் ஓட்டல்களுக்கு இன்று காலை ஒரு வேளை மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story