நெல்லை: சாலை விரிவாக்க பணியின் போது விபரீதம் - மரம் விழுந்து ஆட்டோவில் சென்ற 2 பேர் உயிரிழப்பு...!
நெல்லை அருகே சாலை விரிவாக்க பணியின் போது ஆட்டோ மீது மரம் விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நெல்லை,
நெல்லை இருந்து பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலையில் பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே சாலை விரிவாக்கத்துக்காக பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றும் போது சாலையில் வந்த ஆட்டோவின் மீது விழுந்ததில் காதர் என்பவரும் ரகுமத் என்ற பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதை கண்டித்து சேரன்மகாதேவி ரவுண்டானா பகுதியில் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story