ரூ.1.60 லட்சம் மின் கட்டணம் - கூலித்தொழிலாளிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்
வேலூரில் கூலி தொழிலாளி வசிக்கும் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்,
வேலூரில் கூலி தொழிலாளி வசிக்கும் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் முத்து மண்டபம் டோபி கானா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி அம்மாள். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் 2 மாதத்திற்கு ஒருமுறை குறைந்தபட்சமாக 95 ரூபாயும் அதிகபட்சமாக150 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின் கட்டணம் கணக்கீடு செய்ய வந்த அதிகாரிகள், 1 லட்சத்து 60 ஆயிரத்து 642 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என அட்டையில் எழுதி விட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கூலி தொழிலாளி ராணி அம்மாள், மின்வாரிய அலுவலர்களிடம் இதுக்குறித்து முறையிட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரிய அதிகாரிகள், பழைய மீட்டரை மாற்றி புது மீட்டரை பொருத்திவிட்டு, உண்மையான மின் கட்டணம் என்ன?, மின் கட்டணம் உயர காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்
Related Tags :
Next Story