கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ரங்கசாமி திடீர் சந்திப்பு


கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ரங்கசாமி திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 5 May 2022 8:11 PM IST (Updated: 5 May 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.

புதுச்சேரி
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி  கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் புதுவை அரசு நிர்வாகம் தொடர்பாக பேசியதாக தெரிகிறது. அதேநேரத்தில் அவர்களது சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக கவர்னர் மாளிகை சார்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவை வந்து சென்ற நிலையில் இவர்கள் இருவரது சந்திப்பும் புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Next Story