சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மரத்தில் மோதி விபத்து - 21 மாணவிகள் படுகாயம்...!
சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மரத்தில் மோதிய விபத்தில் 21 மாணவிகள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் திருவேங்கடத்தில் இருந்து சாத்தூர் வந்த தனியார் கல்லூரி பஸ் மரத்தில் மோதிய விபத்தில் 21 மாணவிகள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் கூறுகையில்,
திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியிலிருந்து சுமார் 60 மாணவிகள் வந்த தனியார் கல்லூரி பஸ்சினை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 21-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக காயமடைந்த மாணவிகளை மீட்டு அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த 6 மாணவிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story