பெருந்துறை அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 14 பேர் படுகாயம்...!
பெருந்துறை அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த நிலையில் 14 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
பெருந்துறை,
பெங்களூரிலிருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்த சொகுசு பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் அதிகாலை 4 மணியளவில் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை பூவம்பாளையம் பிரிவு அருகே வந்த போது முன்னால் சென்ற சரக்கு லாரியை முந்திச் செல்ல முயன்று உள்ளது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாடை இழந்த சொகுசு பஸ் லாரியன் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் பயணம் செய்த திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த சரஸ்வதி(74) என்ற மூதாட்டி உயிரிழந்து நிலையில் படுகாயம் அடைந்த 14 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story